சென்னை பெண்களுக்கு தேசிய மேடைக்கு செல்ல புதிய வாய்ப்பு – VG Pageants Chennai அறிமுகம் !
சென்னை பெண்களுக்கு தேசிய மேடைக்கு செல்ல புதிய வாய்ப்பு – VG Pageants Chennai அறிமுகம் !
சென்னை, ஜூன் 14, 2026: பெண்களின் தன்னம்பிக்கை, தனித்திறன் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் VG Pageants Chennai அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள The Park Chennai ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் Visionara Global நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தேசிய இயக்குநரான பினிதா ஸ்ரீவாஸ்தவா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் திறமையும் சக்தியும் இருக்கிறது. அதனை வெளிக்கொண்டு வர சரியான வாய்ப்பும் வழிகாட்டுதலும் தேவை. அந்த வாய்ப்பை உருவாக்குவதற்காகவே VG Pageants செயல்படுகிறது” என்றார்.
இந்தியாவின் முன்னணி பெண்கள் மாற்றத்தலைவராக (Transformation Leader) அறியப்படும் பினிதா ஸ்ரீவாஸ்தவா, TEDx பேச்சாளர், Amazon Bestselling Author மற்றும் Visionara Global நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அவர் இதுவரை நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் அவருக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
நிகழ்ச்சியில் Visionara Global நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் விஸ்வாஸ் ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், பெண்களுக்கு நகர அளவிலிருந்து தேசிய அளவிற்கு செல்லும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல நகரங்களில் VG Pageants விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சென்னை பிரிவின் சிட்டி டைரக்டராக பொறுப்பேற்றுள்ள ராதிகா லக்ரா, தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொண்டார். வங்கி துறையில் பணியாற்றி வரும் அவர், ஒரு சிறப்பு தேவையுடைய குழந்தையின் தாயாகவும் குடும்ப பொறுப்புகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
47 வயதில் தனது கனவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் புதிய பயணத்தை தொடங்கிய ராதிகா, Miss & Mrs India Global Icon 2026 போட்டியில் முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றார். இந்த அனுபவம் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும், பெண்கள் தங்கள் கனவுகளை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கலாம் என்பதற்கு தானே ஒரு உதாரணம் என்றும் அவர் கூறினார்.
மேலும், சென்னை பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் முன்னேற இந்த மேடை உதவும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் Miss Chennai, Ms Chennai மற்றும் Mrs Chennai நகர அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, Kids & Teen Fashion Show, Runway Show, Grooming Program, Professional Portfolio Shoot போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், நாட்டின் முக்கியமான அழகிப் போட்டிகளில் ஒன்றான VG Miss & Mrs India National Pageant-இல் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சி மூலம் சென்னை பெண்களுக்கு தன்னம்பிக்கை, தனித்துவம், பொதுமக்கள் மத்தியில் அங்கீகாரம் மற்றும் தேசிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பெண்களின் வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, சென்னை நகரில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








கருத்துகள் இல்லை