முதற்கனல் திரை விமர்சனம் !
இன்றைய சமூகத்தில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்தின் ஆபத்தையும், அதன் பின்னால் சீரழியும் வாழ்க்கை, குடும்பங்களின் வேதனை மற்றும் அதனால் உருவாகும் சமூகப் பிரச்சினைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் திரைப்படம் 'முதற்கனல்'.
தவறான நட்பால் போதை வலையில் சிக்கிக் கொள்ளும் ஒரு மாணவனின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாகவும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் இயக்குநர் ஆர். வெங்கடரமணன் கையாண்டிருக்கிறார். சமூக விழிப்புணர்வு கருத்தை பிரசங்கமாக இல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
நாயகன் அஸ்வின் விஸ்வநாத் தனது இயல்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பால் கதாபாத்திரத்தின் மனநிலைகளையும் வேதனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அவருக்கு துணையாக நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர்.
கந்தசாமி கோபாலின் ஒளிப்பதிவு, மீரா லாலின் பின்னணி இசை மற்றும் டிஸ்யன் சாரதியின் நேர்த்தியான படத்தொகுப்பு ஆகியவை கதையின் உணர்வுகளையும் பரபரப்பையும் மேலும் வலுப்படுத்துகின்றன.
போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்தை இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வலுவாக எடுத்துரைக்கும் 'முதற்கனல்', சமூக அக்கறையும் சினிமாத்தன்மையும் இணைந்த தரமான படைப்பாக திகழ்கிறது.
சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், இறுதிவரை விறுவிறுப்பாக பயணிக்கும் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விழிப்புணர்வு படமாகும்.
Rating : 3 / 5









கருத்துகள் இல்லை