சற்று முன்



தமிழில் எனக்கு ஓர் இடம் வேண்டும்: தெலுங்கில் இருந்து வரக் காத்திருக்கும் நடிகை தன்மை குஷி..!



தமிழில் எனக்கு ஓர் இடம் வேண்டும்: தெலுங்கில் இருந்து வரக் காத்திருக்கும் நடிகை தன்மை குஷி..!



தெலுங்கில் இருந்து தமிழுக்கு ஒரு நம்பிக்கை முகம்: நடிகை தன்மை குஷி..!

சென்ற ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ஒன்றுதான் '23' ( இரவை மூடு) என்கிற திரைப்படம்,ஆந்திராவில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது.


இத்திரைப்படத்தில் துயரச் சம்பவங்களான 1991-ஆம் ஆண்டின் சுந்துரு படுகொலை, 1993-ஆம் ஆண்டின் சிலகலூரிபேட்டை பேருந்து எரிப்புச் சம்பவம் மற்றும் 1997-ஆம் ஆண்டின் ஹைதராபாத் கார் குண்டுவெடிப்பு ஆகியவற்றை நினைவூட்டும் வகையில் பின்னணியாகக் கொண்டு திரைப்படம் உருவானது.

இயக்குநர் ராஜ் ரச்சகொண்டா இயக்கத்தில் ஒரு காதல் கதையாகத் தொடங்கும் இந்தத் திரைப்படத்தில் தேஜா நாயகனாக சாகர் என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது காதலியாக சுசிலா பாத்திரத்தில் அறிமுக நடிகை தன்மை குஷி நடித்திருந்தார். ஒரு புது முகமாகப் பல்வேறு நடிப்புத் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மிளிர்ந்த நடிகையாக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஒருவராக அவர் வெளியே தெரிந்தார். 


தன்மை குஷி ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டையும் ஏற்பையும் பெற்று இப்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல தமிழில் நடிப்பதற்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார்.

நடிகை தன்மை குஷி இது பற்றிப் பேசும் போது..,

சினிமா ஒரு வியாபார உலகம் .அதில் சாதாரண சினிமா கதாநாயகி போல் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நல்ல குடும்பப் பாங்கான கதை அழுத்தம் உள்ள பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்,கதாநாயகியை மையப்படுத்திக் தமிழில் நிறைய படங்கள் வருகின்றன .அப்படி குடும்பப் பாங்கான மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்குத் தமிழில் ஓர் இடம் கொடுங்கள் என்று தன்மை தன்மையாகக் கூறினார்.



கருத்துகள் இல்லை