சற்று முன்



தமிழ்நாட்டின் ஆடி மாத ஷாப்பிங் பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது !



தமிழ்நாட்டின் ஆடி மாத ஷாப்பிங் பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது  ! 

ஜூலை 27, சென்னை: தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமான ஆடி மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு, GIVA நிறுவனம் தனது சென்னை ஆபரண விற்பனையகங்களில் ஒரு மாத காலத்திற்கு கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது. ஆடி பண்டிகைக் கால ஷாப்பிங், நவீன ஆபரண கலெக்‌ஷன்கள் மற்றும் சிறப்புப் பருவகாலச் சலுகைகளை ஒருங்கிணைத்த குதூகல கொண்டாட்டமாக இது இருக்கும். 



இந்தக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 17 -ம் தேதி வரை தொடர்கின்றன. ஆடிப் பெருக்கு (ஆகஸ்ட் 1–3) திருவிழா நாட்கள், ஷாப்பிங் செய்வதற்கான உச்சக்கட்ட வார இறுதி நாட்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு மாத கொண்டாட்ட காலம் முழுவதும் வாடிக்கையாளர்கள் ஜிவா - ன் அற்புதமான ஆபரண கலெக்‌ஷன்கள் மீது பிரத்யேகப் பருவகால சிறப்பு சலுகைகளைப் பெறலாம்.


இந்த சிறப்பு கொண்டாட்ட நிகழ்வு குறித்து ஜிவா – ன் தலைமை வருவாய் அதிகாரி திரு. அனிருத் குத்வா பேசுகையில், "தமிழ்நாடு மாநிலம் ஜிவா-விற்கு ஒரு முக்கியமான சந்தையாகும்; மேலும் ஆடி மாதம் என்பது இப்பிராந்தியத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாப்பிங் பருவங்களில் ஒன்றாகும். சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்த நிகழ்வின் மூலம், தமிழக மக்களின் பாரம்பரியத்தை நாங்களும் இணைந்து கொண்டாடுகிறோம்; சென்னை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் எங்கள் நவீன, ஆபரண கலெக்‌ஷன்களை சிறப்பு சலுகைகளுடன் எளிதாக வாங்கி மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.” என்றார்.

ஆடி சிறப்பு சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விற்பனை காலத்தில் வெள்ளி நகைகளுக்கு 'இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' சலுகையை நுகர்வோர்கள் பெற்று மகிழலாம். மேலும், ஆடிப் பெருக்கு திருவிழா வார இறுதி நாட்களில் (ஆகஸ்ட் 1–3) 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சிறப்பான சலுகையும் உண்டு. தங்க நகைகள் மற்றும் ஆய்வகத்தில் வளர்த்து உருவாக்கப்படும் வைர நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், இந்த ஆடி மாதம் முழுவதும் வைரத்தின் விலையில் சிறப்பு சேமிப்பைப் பெறலாம்.



கருத்துகள் இல்லை