ஒன் மேன் திரை விமர்சனம் !
ஒரு முழுநீளத் திரைப்படத்தை உருவாக்க ஒரு பெரிய படக்குழுவே தேவைப்படும் நிலையில், கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, கிராபிக்ஸ் என பெரும்பாலான பணிகளை தனி ஒருவராக மேற்கொண்டு சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கியிருக்கும் படம் ‘ஒன் மேன்’.
நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநரின் பயணத்தில் தொடங்கும் கதை, மனிதனின் பேராசையால் உலகமே அழியும் அபாயத்தையும், அந்த ரகசியத்தைப் பயன்படுத்தி உலகை ஆள நினைக்கும் மனிதர்களின் ஆசையையும் விறுவிறுப்பாகச் சொல்கிறது. கார் சேசிங், ஹெலிகாப்டர், ரயில், விமானப் பயணம் என பல பிரமாண்டக் காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்க்கிறது.
குறிப்பாக, கூட்டம் நிறைந்த காட்சிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் தானே நடித்திருப்பதும், தமிழகத்திலும் அமெரிக்காவிலும் தனி மனிதராக படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகளை மேற்கொண்டிருப்பதும் ஆச்சரியப்பட வைக்கிறது.
கிராபிக்ஸ் காட்சிகளின் தரத்தில் சில குறைகள் இருந்தாலும், இவ்வளவு பெரிய முயற்சியை ஒரே மனிதர் மேற்கொண்டிருப்பதே படத்தின் மிகப்பெரிய பலம். அந்த உழைப்பும், சினிமா மீதான ஆர்வமும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.
முயற்சியில் பிரமிக்க வைக்கும் ‘ஒன் மேன்’, சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பார்வையாளரையும் “இதை எப்படி ஒருவரால் செய்ய முடிந்தது?” என்று வியக்க வைக்கும் ஒரு வித்தியாசமான திரைப்படம்.
Rating 3 / 5







கருத்துகள் இல்லை