போட்டோகிராபர்' – வித்தியாசமான முயற்சியுடன் உருவான உளவியல் த்ரில்லர் ! திரை விமர்சனம் !
அரிய மரத்தை புகைப்படம் எடுக்க மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குச் செல்லும் புகைப்படக் கலைஞர் அஷ்ரப், எதிர்பாராத சூழ்நிலையில் ஆபத்தான காட்டில் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதையே மர்மம், திகில் மற்றும் உளவியல் அம்சங்களுடன் சொல்லும் படமே 'போட்டோகிராபர்'.
கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் கதாநாயகனாக அஷ்ரப் சிறப்பாக கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பும், திரைக்கதையின் வேகமும் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவில் வனப்பகுதியின் இயற்கை அழகு ரசிக்க வைக்கிறது. ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை திகில் உணர்வை மேலும் உயர்த்துகிறது. முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் உளவியல் அம்சங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
வித்தியாசமான கதைக்களத்துடன் மர்மம் மற்றும் உளவியல் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படமாக 'போட்டோகிராபர்' அமைந்துள்ளது.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை