சற்று முன்



DC (டிசி ) காதலும் வன்முறையும் கலந்த அதிரடி பயணம்! திரை விமர்சனம் !

 


தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவரது நடிப்பில் டிசி. மற்றும் நடிகை சஞ்சனா ஏ.கே , வாமிகா கபி, கஸ்தூரிராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். 

இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். 

கதை ஆரம்பமே : 

சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறை செல்லும் தேவதாஸின் வாழ்க்கை, சிறைவாசத்துக்குப் பிறகு முற்றிலும் மாறுகிறது. காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் பயணத்தில் சஞ்சனா ஏ.கே-வை சந்திக்கும் அவர், பின்னர் வாமிகா கபியை சந்தித்து அவரது நரக வாழ்க்கையிலிருந்து மீட்கிறார். அதன்பிறகு இருவரும் இணைந்து மேற்கொள்ளும் பயணம், காவல்துறைக்கும் குற்றவாளி கும்பலுக்கும் இடையிலான அதிரடி மோதலாக மாறுகிறது.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். அளவான நடிப்பிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார். வாமிகா கபி, தனது உடல்மொழி மற்றும் இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தின் வலியை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சஞ்சனா ஏ.கே குறுகிய நேரமே வந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் முடிவு மனதை பாதிக்கிறது.

முகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம். வித்தியாசமான கேமரா கோணங்களும், வேகமான காட்சியமைப்பும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. ஜி.கே. பிரசன்னாவின் படத்தொகுப்பு வன்முறை நிறைந்த காட்சிகளையும் கதையுடன் தடையின்றி நகர்த்துகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை. ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் தேவையான அதிர்வையும், உணர்வையும் தனது இசையின் மூலம் கூட்டியிருக்கிறார். திரையில் நடக்கும் வன்முறையை வெறும் அதிர்ச்சியாக மட்டும் காட்டாமல், அதை கதையோடு பயணிக்க வைத்திருப்பது படத்தின் சிறப்பு.

அருண் மாதேஸ்வரனின் வழக்கமான இரத்தம், சதை கலந்த வன்முறை காட்சிகளுடன் காதலையும் உணர்வையும் இணைத்து புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக தேவதாஸ்–சந்திரா உறவு மலரும் காட்சிகள், படத்தின் வன்முறை சூழலுக்கு நடுவே ஒரு அழகான உணர்வை உருவாக்குகின்றன.

மொத்தத்தில், ‘டிசி’ என்பது அதிரடி, காதல், வன்முறை மற்றும் உணர்வு ஆகியவற்றை சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கும் ரசிக்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 


கருத்துகள் இல்லை