சற்று முன்



Hi ( ஹை’) திரை விமர்சனம் !



காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு ஓடி வரும் கவினும், திருமணத்தைத் தவிர்த்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறும் நயன்தாராவும் சென்னையில் சந்திக்கிறார்கள். இருவரும் நண்பர்களாகப் பழகும் நிலையில், நயன்தாராவை காதலிக்கத் தொடங்குகிறார் கவின். ஆனால், காதல் மற்றும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று நயன்தாரா கூறுவதால், தனது காதலை வெளிப்படுத்தாமல் மறைத்துக்கொள்கிறார்.

சூழ்நிலை காரணமாக இருவரும் சில மாதங்கள் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நயன்தாராவை காதலிக்க வைக்க கவின் முயற்சிக்கிறார். அந்த முயற்சி வெற்றி பெற்றதா என்பதே படத்தின் கதை.

கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் ஏக்கம், ஏமாற்றம், நகைச்சுவை என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, நயன்தாருடனான காட்சிகளில் அவரது முதிர்ச்சியான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்.

நயன்தாரா அழகாகவும், முதிர்ச்சியான நடிப்புடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு ரசிக்க வைக்கிறது. இருப்பினும், சில காட்சிகளில் அவரது வயது முதிர்ச்சி கவினுடனான காதல் காட்சிகளுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பது சிறிய குறையாகத் தெரிகிறது.

ராதிகா, கே.பாக்யராஜ், பிரபு, சுஹாசினி மணிரத்னம் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோர் வரும் காட்சிகள் குறிப்பாக சிரிக்க வைக்கின்றன.

ராஜேஷ் சுக்லாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு, ஜென் மார்ட்டினின் இனிமையான இசை மற்றும் பிலோமின் ராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்தை ரசிக்க வைக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், பெரிய திருப்பங்களோ பரபரப்பான சம்பவங்களோ இல்லாமல், எளிமையான காதல் கதையை இதமான உணர்வுகளுடன் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தாத எளிய காதல் கதை என்றாலும், கவினின் இயல்பான நடிப்பு, நகைச்சுவை மற்றும் இதமான காதல் உணர்வுகள் காரணமாக ‘ஹை’ ரசிக்க வைக்கிறது.

Rating : 3 /



கருத்துகள் இல்லை