சற்று முன்



சர்தார் 2 திரை விமர்சனம் !



நாட்டை அழிக்கும் சதித்திட்டத்தை முறியடிக்க, உளவாளியான கார்த்தி தனது தந்தையுடன் இணைந்து போராடுவதே ‘சர்தார் 2’ படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியில் உளவாளியை தேடும் கார்த்தி, எதிர்பாராத விதமாக தனது தந்தை உயிருடன் இருப்பதை அறிகிறார். பின்னர் நாட்டுக்கு எதிரான மிகப்பெரிய சதித்திட்டம் அவருக்கு தெரியவருகிறது. தந்தை–மகன் இணைந்து அந்த சதியை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்‌ஷன், சாகச காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

இரட்டை வேடங்களில் நடித்துள்ள கார்த்தி, அப்பா–மகன் கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டை மற்றும் சாகச காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். யோகி பாபு–நிழல்கள் ரவி கூட்டணி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.

மற்றும் நடிகை மாளவிகா  மோகன் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

மற்றும் நடிகை ஆஷிகா ரகுநாத் கதைக்கேற்ப நடித்துள்ளார்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தை அதிகரிக்கிறது. 

சாம்.சி.எஸ்.பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. தனது முழு அனுபவத்தையும் இசையில் பிஜிஎம்மில் பேக்ரவுண்ட் ஸ்கோர் அசத்தி விட்டார். இப்படத்திற்கு மிகப் பக்க பலமாக இசை பின்னனி இசை அமைந்துள்ளது. சாம்.சி.எஸ் அவர்களுக்கு இது நூறாவது படம் ஆகும். 


விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு நீளமான படத்தை தொய்வின்றி நகர்த்துகிறது.

சமூகப் பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேராபத்தை எச்சரித்திருக்கும் இயக்குநர், அதை பிரசாரமாக இல்லாமல் விறுவிறுப்பான உளவாளி படமாக கொடுத்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில், கதை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘சர்தார் 2’, கார்த்தியின் நடிப்பு மற்றும் பிரமாண்டமான சாகச காட்சிகளால் ரசிகர்களை கவரும் படமாக உள்ளது.

Rating : 3 /


கருத்துகள் இல்லை