சற்று முன்



மண்டாடி திரை விமர்சனம் ! மீனவர் வாழ்வியலுக்கு புதிய கோணம்



மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், வழக்கமான கதைக்களத்தில் இருந்து விலகி பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு பயணிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பாய்மரப் படகுப் பந்தயத்தில் முகவைப்பட்டினம் சார்பில் புதிய அணியை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார் சூரி. இதற்கு எதிராக சுஹாஸ் களமிறங்குகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சூரி ஊரை விட்டு வெளியேறியதற்கான காரணம், இருவருக்கும் இடையிலான பழைய பகை ஆகியவை கதையின் முக்கிய பின்னணியாக அமைந்துள்ளன.

முத்துக்காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி, ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவரது உடல்மொழியும், ஆக்ரோஷமான நடிப்பும் கவனம் ஈர்க்கின்றன.

வில்லனாக நடித்திருக்கும் சுஹாஸ், சூரிக்கு இணையான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது பார்வையிலேயே கதாபாத்திரத்தின் கோபத்தையும் பகை உணர்வையும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

மகிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றனர். மிதுன் ஜெய்சங்கர் மற்றும் பாலசரவணன் ஆகியோர் ஆங்காங்கே நகைச்சுவையால் படத்தை இலகுவாக்குகின்றனர்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், கடல் மற்றும் பாய்மரப் படகுப் பந்தயத்தை பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பந்தயக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளன.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை ஆக்‌ஷன் மற்றும் பந்தயக் காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. படத்தொகுப்பாளர் ஈ.ராகவின் வேகமான படத்தொகுப்பும் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் மதிமாறன் புகழேந்தி, மீனவர்களின் வாழ்வியலை கடல், காதல், நட்பு, துரோகம், பகை ஆகியவற்றுடன் இணைத்து புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பாக பாய்மரப் படகுப் பந்தயத்தை திரையில் கொண்டு வந்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

மொத்தத்தில், வலுவான நடிப்பு, பிரமிக்க வைக்கும் கடல் காட்சிகள், விறுவிறுப்பான பந்தயக் காட்சிகள் என ‘மண்டாடி’ புதிய திரை அனுபவத்தை வழங்கும் படமாக அமைந்துள்ளது.

Rating : 4 /


கருத்துகள் இல்லை