சற்று முன்



பெத்லகேம் குடும்ப யூனிட் திரை விமர்சனம் !



இறந்த காதலியின் நினைவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் மத்திய வயது நிவின் பாலியின் வாழ்க்கையில், பக்கத்து வீட்டில் குடியேறும் கல்லூரி மாணவி மமிதா பைஜு வருகிறார். நட்பாகத் தொடங்கும் இவர்களது உறவு, வயது வித்தியாசத்தையும் கடந்து காதலாக மாறுகிறது. அந்தக் காதலால் உருவாகும் களேபரங்களை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

மத்திய வயது காதலனாக நிவின் பாலி சிறப்பாக நடித்திருக்கிறார். தயக்கம், வெட்கம், காதல், வலி என பல்வேறு உணர்வுகளை தனது உடல்மொழி மற்றும் முகபாவனைகள் மூலம் இயல்பாக வெளிப்படுத்துகிறார். மமிதா பைஜு தனது துடுக்குத்தனமான நடிப்பால் கவர்கிறார். குறிப்பாக, வயது வித்தியாசத்தைப் பற்றி கவலைப்படாமல் காதலை அவர் அணுகும் விதம் ரசிக்க வைக்கிறது.

சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு கதைக்களத்தையும், அதன் அழகான சூழலையும் ரசிக்க வைக்கிறது. விஷ்ணு விஜய்யின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பும் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.

கிரிஷ்.ஏ.டி மற்றும் கிரண் ஜோசியின் எளிமையான கதை மற்றும் திரைக்கதை, காதலை வழக்கமான பாணியில் சொல்லாமல் நகைச்சுவையுடனும் உணர்வுடனும் அணுகியிருப்பது சிறப்பு. இயக்குநர் கிரிஷ்.ஏ.டி, ஒரு எளிய காதல் கதையை ரசிக்கும்படியும் மனதைத் தொடும்படியும் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், வயது வித்தியாசத்தைத் தாண்டிய காதலை நகைச்சுவையுடனும் அழகான உணர்வுகளுடனும் சொல்லும் ரசிக்கத்தக்க திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

Rating : 3.5 / 5 


கருத்துகள் இல்லை