டோரதி' திரைப்படத்தில் வில்லன் அவதாரத்தில் மிரள வைத்த நடிகர் சௌந்தரராஜா !
'சுந்தரபாண்டியன்', 'ஜிகர்தண்டா', கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சௌந்தரராஜா. தற்போது வெளியாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் மூலம் ஒரு கொடூரமான வில்லன் அவதாரமெடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கணவராக நடித்திருக்கும் சௌந்தரராஜா, வெறுமனே நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரது ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாகவும், பார்ப்பவர்களுக்கு கோபத்தை தூண்டும் வகையிலும் மிகக் கொடூரமாக அமைந்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஒரு முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை சௌந்தரராஜா கச்சிதமாக செய்து முடித்துள்ளார். குறிப்பாக, இவரது மதுரை தமிழும், வசன உச்சரிப்பும் கச்சிதமாகவும், மிக இயல்பாகவும் அமைந்தது படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.
ஆணாதிக்கம் நிறைந்த, கொடூரமான கொலைகளை செய்ய தயங்காத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தரராஜா வெளிப்படுத்தியிருக்கும் இந்த மிரட்டலான நடிப்பு, அவருக்கு அடுத்தடுத்து பல பெரிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக டோரதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சௌந்தரராஜா ஒரு ஆழமான, நேர்மையான நடிகர் என்றும், இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்றும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த், சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் 'டோரதி' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.











கருத்துகள் இல்லை