சற்று முன்



அன்பில் அவன்’ திரை விமர்சனம் !




அசோக் செல்வன்–பிரீத்தி முகுந்தன் தம்பதி மலை கிராமத்தில் ஹோம் ஸ்டே தொடங்க முயற்சிக்கும்போது எதிர்பாராத பிரச்சினையில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவர்கள் தப்பிக்க போராடும் கதையே ‘அன்பில் அவன்’.

கணவனாக பொறுப்புடன் செயல்படும் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரீத்தி முகுந்தனும் காதல், மோதல், உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். இருவரின் கெமிஸ்ட்ரி படத்திற்கு பலம்.

கோவிந்த் வசந்தாவின் இசையும், கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. முதல் பாதியின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் நீளமான ஆக்‌ஷன் காட்சிகளும், கணிக்கக்கூடிய திரைக்கதையும் படத்தின் வேகத்தை குறைக்கின்றன.

காதல் காட்சிகளில் ரசிக்க வைத்தாலும், பழக்கமான ஆக்‌ஷன் கதைக்களத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது ‘அன்பில் அவன்’.

Rating : 3 / 5 


கருத்துகள் இல்லை