சற்று முன்



பத்தா’ திரை விமர்சனம் !

 


ரவுடித்தனம், சாராய வியாபாரம் என ஊரையே அச்சுறுத்தும் பத்தா (விஜய் சேதுபதி), எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பிக்க பள்ளி மாணவன் சபரியின் உதவி தேவைப்படுகிறது. பத்தாவை பார்த்தாலே பயப்படும் சபரி, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவருக்கு எப்படி பாடம் புகட்டுகிறான் என்பதே படத்தின் கதை.

பத்தாவாக விஜய் சேதுபதி முரட்டுத்தனம், ஆணவம், பயம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் தனது நடிப்பாலும் உடல் மொழியாலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக சிறுவன் சாய் பிரித்வி ராஜும் சிறப்பாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான காட்சிகளும் உரையாடல்களும் படத்தின் முக்கிய பலம்.

80-களின் காலகட்டத்தை அழகாக பிரதிபலிக்கும் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு வலு சேர்க்கும் சாய் அபயங்கரின் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம்.

முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், சிறுவனுக்கும் ரவுடிக்கும் இடையிலான உறவு மற்றும் உணர்வுகளை மையப்படுத்திய காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. எளிமையான கதையை உணர்வுப்பூர்வமான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

மொத்தத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பிரித்வி ராஜின் சிறப்பான நடிப்புடன், மனிதர்களின் குணங்களையும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும் சொல்லும் சுவாரஸ்யமான படமாக ‘பத்தா’ அமைந்துள்ளது.

Rating : 3 / 5 


கருத்துகள் இல்லை