சற்று முன்



நிறம் திரை விமர்சனம் !




மருத்துவக் குற்றங்கள், பெண்கள் கடத்தல், அரசியல் சதி எனப் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறம்’.

மருத்துவராக வரும் முகேன் ராவ், தனது காதலியான ப்ரீத்தி அஸ்ரானி கடத்தப்பட்டதும் அவரைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன.

முகேன் ராவ் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ப்ரீத்தி அஸ்ரானி துணிச்சலான பெண்ணாக கவனம் ஈர்க்கிறார். தான்யா ஹோப் தனது கதாபாத்திரத்தில் பொருந்துகிறார். குறிப்பாக, வில்லனாக வரும் நிதின் சத்யா தனது மிரட்டலான நடிப்பால் தனித்து நிற்கிறார்.

டி. இமான் இசையில் தந்தை – மகள் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் மனதைத் தொடுகிறது. ஆனால், ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பு குறைவாக இருப்பது படத்தின் பலவீனம்.

மொத்தத்தில், நல்ல சமூகக் கருத்தும் சுவாரஸ்யமான கதைக்களமும் இருந்தாலும், திரைக்கதையின் தடுமாற்றத்தால் முழுமையான திருப்தியைத் தரத் தவறுகிறது இந்த ‘நிறம்’. நிதின் சத்யாவின் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை