ஆக்டோபஸ் – மர்மமும் திருப்பங்களும் நிறைந்த விறுவிறுப்பான தொடர்!
ZEE5 தளத்தில் வெளியாகியுள்ள ‘ஆக்டோபஸ்’ வெப் தொடர், மர்மம், சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் புதிதாகக் குடியேறும் தம்பதியினரால் பல மர்மமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மனைவி திடீரென காணாமல் போக, அதன் பின்னணியில் இருக்கும் உண்மையைத் தேடும் பயணமே தொடரின் கதை.
அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையும், கண்ணா ஆர்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு வலு சேர்க்கின்றன. திரில்லருடன் இணைந்த கோர்ட் டிராமா மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் கூடுதல் சுவாரஸ்யம் அளிக்கின்றன.
மொத்தத்தில், விறுவிறுப்பான திரைக்கதை, மர்மம், எதிர்பாராத திருப்பங்கள் என இறுதிவரை ரசிக்க வைக்கும் சுவாரஸ்யமான வெப் தொடர் ‘ஆக்டோபஸ்’!
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை