தடை அதை உடை’ திரை விமர்சனம் ! Review
‘தடை அதை உடை’ – வித்தியாசமான கதை சொல்லல் முயற்சி !
திரைத்துறையில் சாதிக்க விரும்பும் மூன்று இளைஞர்களின் கனவுப் பயணத்தையும், அதனுடன் பழைய கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து மீட்கப்பட்ட ஒரு தலைமுறையின் உண்மைச் சம்பவத்தையும் இணைத்து சொல்லும் வித்தியாசமான முயற்சியாக வருகிறது *‘தடை அதை உடை’*.
அறிவழகன் முருகேசன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்த படம், சமூக ஊடகங்கள் மூலம் பரவிவரும் சீர்கேடுகளை நையாண்டியாக வெளிப்படுத்துகிறது. கதை சொல்லலில் அவர் எடுத்துள்ள புதிய பாணியும், சமூகச் செய்தியை சிரிப்புடன் சொல்லும் முயற்சியும் பாராட்டத்தக்கவை.
அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ் உள்ளிட்ட புதுமுகங்கள் அனைவரும் இயல்பான நடிப்பால் கதைமாந்தர்களாகவே தோன்றுகிறார்கள். சாய் சுந்தரின் இசை, தங்கப்பாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டனின் ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலமாக இருக்கின்றன.
சில இடங்களில் கதை பல கோணங்களில் சிதறி, பார்வையாளரை குழப்பினாலும், சமூகப் பிரச்சனைகளை சிரிப்புடன் கூறும் இயக்குநரின் முயற்சி கவனிக்கத் தக்கது.
மொத்தத்தில் ‘தடை அதை உடை’ – புதிய தலைமுறை பார்வையில் சமூகச் செய்தியுடன் கூடிய சிந்தனையூட்டும் படம்.
Rating : 2.5 / 5







கருத்துகள் இல்லை